அம்பை கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழா


அம்பை கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழா
x
தினத்தந்தி 20 March 2022 1:43 AM IST (Updated: 20 March 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

அம்பை பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழா நடந்தது.

அம்பை:
அம்பை பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக காலையில் கோபூஜை, கஜ பூஜை, விக்னேஸ்வர பூஜை, சிறப்பு ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கணபதி, சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று பூந்தட்டு ஊர்வலமும் நடைபெற்றது.தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல்பஞ்ச மூர்த்திகள் தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது. 11 முறை வலம் வந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக நீராழி மண்டபத்தில் சிறுவர் சிறுமிகளின் பரத நாட்டியம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தெப்ப உற்சவத்தைத் தொடர்ந்து சுவாமி-அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Next Story