கருங்கல் அருகே வீட்டு கடன் பெற போலி சான்றிதழ் தயாரித்த வாலிபர் சிறையில் அடைப்பு
கருங்கல் அருகே வீட்டு கடன் பெற அரசு அதிகாரிகளின் ‘சீல்’களை பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரித்தவாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருங்கல்,
கருங்கல் அருகே வீட்டு கடன் பெற அரசு அதிகாரிகளின் ‘சீல்’களை பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரித்தவாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலி சான்றிதழ்
கருங்கல் அருகே உள்ள ஆப்பிகோடு நடுக்காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் செல்வநாயகம். இவருடைய மகன் பிரபு (வயது30). இவர் தொலையாவட்டம் பகுதியில் அலுவலகம் அமைத்து, வீட்டுக்கடன் வாங்கி கொடுத்து வந்தார்.
அங்கு வீட்டு கடன் வாங்குவதற்கு வந்தவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அரசு அதிகாரிகளின் போலி கையெழுத்தை போட்டு சீல் வைத்து தயாரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்காக அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் பணத்தை கமிஷனாக பெற்றுள்ளார்.
போலி கையெழுத்து
இந்தநிலையில் விழுந்தயம்பலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது நிலத்தை சப் டிவிசன் செய்வதற்காக சான்றிதழ் பெற்று கீழ்குளம் பி வருவாய் கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கினார். சான்றிதழ்களை சரிபார்த்த கிராம நிர்வாக அலுவலர் தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் விசாரணை நடத்தி பிரபுவின் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது, அங்கு 104 அரசு அலுவலகங்கள் அதிகாரிகளின் சீல் போலியாக செய்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார், பிரபுவின் அலுவலகத்திற்கு வந்து அங்கு இருந்த போலி சீல், மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, பிரபுவை போலீசார் கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story