எக்கலா தேவி அம்மன் கோவில் விழா
சேத்தூர் எக்கலா தேவி அம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சேத்தூர் எக்கலா தேவி அம்மன் ேகாவிலில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் அம்மனுக்கு பால், தேன், பன்னீர் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கொடியேற்றமும், அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, அக்கினி வளர்த்து அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் செல்லம், சிங்கம் புலி, செயலாளர் சுந்தரதாஸ், பொருளாளர் முருகானந்தம் மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story