பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் -ஆட்டோ டிரைவர் கைது


பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் -ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 March 2022 2:25 AM IST (Updated: 20 March 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்ேடா டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை,
மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 19). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் 9-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இது அந்த மாணவியின் வீட்டுக்கு தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் வேறு பகுதிக்கு வீட்டை மாற்றி சென்று விட்டனர். ஆனாலும் கதிரேசன் மாணவியுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவனியாபுரம் பகுதிக்கு அழைத்துள்ளார். அங்கு மாணவியை புதர் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கதிரேசனை கைது செய்தனர்.


Next Story