தஞ்சையில் தான் வசித்த குடியிருப்பை இடித்து தரைமட்டமாக்கிய மாநகராட்சி ஆணையர்


தஞ்சையில் தான் வசித்த குடியிருப்பை இடித்து தரைமட்டமாக்கிய மாநகராட்சி ஆணையர்
x
தினத்தந்தி 20 March 2022 2:28 AM IST (Updated: 20 March 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள தான் வசித்த குடியிருப்பை இடித்து தரைமட்டமாக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டதின் பேரில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

தஞ்சாவூர்;
தஞ்சை மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள தான் வசித்த குடியிருப்பை இடித்து தரைமட்டமாக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டதின் பேரில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பஸ் நிலைய கடைகள் மற்றும் திருவையாறு பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட வணிக வளாக கடைகள் பொது ஏலமிடப்பட்டு மாநகராட்சிக்கு பெருமளவில் வருமானம் ஈட்டப்பட்டது.
இதே போல் தஞ்சை சரபோஜி மார்க்கெட் பகுதியில் இருந்த கடைகளும் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டப்பட்டு பொதுஏலமிடப்பட்டு மாநகராட்சிக்கு வருவாய் பெருக்கப்பட்டது.
ஆணையர் குடியிருப்பு இடிப்பு
இந்த நிலையில் காந்திஜி சாலை வணிக ரீதியிலான கடைகள் அதிக அளவில் உள்ளன. இதையடுத்து இந்த சாலையில் உள்ள காந்திஜி வணிக வளாகம் மற்றும் அதன் அருகில் உள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு, மாநகராட்சி செயற்பொறியாளர் குடியிருப்பு ஆகியவற்றின் இடத்தில் புதிதாக 3 வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திஜி வணிக வளாகம் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக நேற்று காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு இருந்த கட்டிடம் நேற்று இடிக்கப்பட்டது. 2 பொக்லின் எந்திரங்கள் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
3 வணிக வளாகங்கள்
இடிக்கப்பட்ட கட்டிட கழிவு பொருட்கள் உடனடியாக லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் மாநகராட்சி ஆணையரின் குடியிருப்பையே இடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டதின் பேரில் நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மேலும் அடுத்த கட்டமாக மாநகராட்சி செயற்பொறியாளரின் குடியிருப்பு கட்டிடமும் இடிக்கப்பட உள்ளது. இந்த பகுதியில் தனித்தனியாக டெக்ஸ்டைல்ஸ், நகைக்கடை, ஹார்டுவேர் ஆகிய 3 வணிக வளாகங்கள் ரூ.14 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story