தினத்தந்தி புகாா் பெட்டி


தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 20 March 2022 2:35 AM IST (Updated: 20 March 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி

பறவைகளுக்கு தண்ணீர் 

  அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பல இன பறவைகள் மாலை நேரத்தில் வந்து தங்கி, காலை நேரத்தில் இரை தேட சென்றுவிடுகின்றன. ஆனால் பறவைகள் தாகம் தணித்துக்ெகாள்ள தண்ணீர் தொட்டி இல்லை. அதனால் வனத்துைற அதிகாரிகள் பறவைகள் தங்கும் மரங்கள் அருகே தண்ணீர் தொட்டி வைக்கவேண்டும்.
  ரவீந்திரன் புதுப்பாளையம்.
  
வெயிலில் வாடும் பயணிகள் 
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்குடை இல்லை. ஏற்கனவே இருந்த நிழற்குடையும் மேம்பாலம் கட்டப்பட்டபோது அகற்றப்பட்டுவிட்டது. எனவே பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அங்கு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  காயத்திரி, ஈரோடு.
 
  கோரிக்கை ஏற்பு
ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து கிடந்தது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் உடைந்த சாக்கடை மூடி சரி செய்யப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்துக்கும் பாராட்டை தெரிவித்து கொள்கிறோம்.
  பொதுமக்கள், ஈரோடு.
  
பாராட்டு 

   கோபி பச்சைமலை செல்லும் சாலையில் நடுரோட்டில் மின்கம்பம் ஒன்று இருந்தது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பிரிவில் பிரசுரமாகி இருந்து. இதைத்தொடர்ந்து ரோட்டின் நடுவில் இருந்த மின் கம்பம் அகற்றப்பட்டு சாலையோரம் நடப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
   பொதுமக்கள், பச்சைமலை.


Next Story