லாரி மோதி முதியவர் பலி
லாரி மோதி முதியவர் உயிரிழந்தார்.
செந்துறை:
லாரி மோதியது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்த சேகரின் மகன் அமர்நாத்(வயது 21). இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது தாத்தா தங்கவேலை(75) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். பொய்யாதநல்லூரில் இருந்து மெயின் ரோட்டில் சென்றபோது அரியலூரில் இருந்து எதிரே அதிவேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அமர்நாத்துக்கு கழுத்து, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயம்
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு வந்து அமர்நாத்தை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story