மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2022 2:39 AM IST (Updated: 20 March 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். குடிநீர் ஆதாரத்துக்காக திருமானூரில் கொள்ளிடத்தில் கதவணையுடன் கூடிய தடுப்பணையை, தூத்தூர் மற்றும் தா.பழுவூர் ஒன்றியங்களுக்கு இடையே கட்ட வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகமாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன், மாவட்ட தலைவர் மணியன், ஒன்றிய துணைத் தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் ஜெகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் புனிதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story