லாரி டிரைவர் ‘திடீர்' சாவு
லாரி டிரைவர் திடீரென இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரவி(வயது 29). சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். ஆறுமுகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ரவி தனது தாய் சின்னபொண்ணு மற்றும் தம்பி, தங்கையுடன் வசித்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உடைய ரவி கடந்த 4 நாட்களாக சரியாக சாப்பிடாமல் தொடந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் ரவி சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சின்னபொண்ணு, ரவியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story