விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் உள்பட 8 பேர் மீது வழக்கு


விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் உள்பட 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 March 2022 2:43 AM IST (Updated: 20 March 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ (வயது 45). இவர் கவுல்பாளையம் கிராமத்தில் கிரஷர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ நேற்று முன்தினம் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், கிரஷரில் இருந்து லாரிகள் மூலம் லோடு ஏற்றி செல்ல பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலரும், அக்கட்சியின் நகர செயலாளருமான தங்க.சண்முகசுந்தரம், மணிவாசகம், தென்றல் சரவணன், பிச்சை மற்றும் அவரது மகன், அண்ணாதுரை மற்றும் அவரது மகன், தங்கவேல் உள்ளிட்டோர் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர், என்று கூறியிருந்தார். அதன்பேரில் கவுன்சிலர் உள்பட 8 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மணிவாசகம், 9-வது வாா்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெயசித்ராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story