கர்நாடகத்தில் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவு


கர்நாடகத்தில் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவு
x
தினத்தந்தி 20 March 2022 2:51 AM IST (Updated: 20 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 30 ஆயிரத்து 718 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 173 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 138 பேர் பாதிக்கப்பட்டனர். 14 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 10-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. 15 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  பல்லாரி, பெங்களூரு நகரில் தலா ஒருவர் இறந்தனர். 28 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 35 பேர் இறந்து உள்ளனர். நேற்று 153 பேர் குணம் அடைந்தனர். 39 லட்சத்து 2 ஆயிரத்து 497 பேர் இதுவரை குணம் அடைந்து உள்ளனர். 2 ஆயிரத்து 31 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 0.56 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.15 சதவீதமாகவும் உள்ளது.
  மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story