மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; குமாரசாமி குற்றச்சாட்டு
மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு:
ராமநகரில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதிலும், பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பதிலும் மட்டுமே பா.ஜனதா அரசு ஆர்வம் காட்டுகிறது. மத்திய அரசும் இதே வேலையை தான் செய்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதற்கு தீர்வு காண வேண்டும் என்று அரசு சிந்திக்கவில்லை.
சட்டசபை தேர்தலை சந்திக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி தயாராக இருக்கிறது. நாளை (இன்று) பெங்களூருவில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநாடு நடக்கிறது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story