விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்


விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
x
தினத்தந்தி 20 March 2022 3:02 AM IST (Updated: 20 March 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமானது.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமானது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. பின்னர் 10 மணி அளவில் கடல் சீற்றம் மற்றும் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து 1 மணி நேர தாமதத்துக்கு பிறகு 11 மணிக்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது. அதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் பொறுமையுடன் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு களித்தனர்.
----


Next Story