ஏப்ரல் 1-ந் தேதி அமித்ஷா துமகூரு வருகை


ஏப்ரல் 1-ந் தேதி அமித்ஷா துமகூரு வருகை
x
தினத்தந்தி 20 March 2022 3:11 AM IST (Updated: 20 March 2022 3:11 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி அமித்ஷா ஏப்ரல் 1-ந்தேதி துமகூருவுக்கு வருகிறார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தோ்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றிருந்தது. இதனால் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இப்போதில் இருந்தே பா.ஜனதா தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந் தேதி கர்நாடக மாநிலம் துமகூருவுக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் துமகூருவில் நடைபெற உள்ள கூட்டுறவு துறை சம்பந்தப்பட்ட பல்வேறு திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். மேலும் துமகூரு சித்தகங்கா மடத்தில் நடைபெறும் சிவக்குமார சுவாமியின் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

  அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த இருக்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டுறவு துறை சம்பந்தப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்க துமகூரு வருவதாகவும், அவர் பெங்களூருவுக்கு வருவது, பெங்களூருவில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் கூட்டுறவு துறை மந்திரி சோமசேகர் தெரிவித்துள்ளார்.

Next Story