டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள், பணம் கொள்ளை


டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள், பணம் கொள்ளை
x
தினத்தந்தி 20 March 2022 6:01 PM IST (Updated: 20 March 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள், பணம் கொள்ளை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு-ஆரணி சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. 

நேற்று  வழக்கம்போல் சூப்பர்வைசர் பாண்டியன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். 

இன்று காலை டாஸ்மாக் கடையை திறக்க வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கடையின் ஷட்டர் திறந்திருந்தது.

 உள்ளே சென்று பார்த்தபோது 150 மதுபான பாட்டில்கள், ரூ.3 ஆயிரத்ைத காணவில்லை. யாரோ கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் பாண்டியன் சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தா்ா. 

இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story