ஆற்காட்டில் சாலை பணியாளர்கள் சங்க மாநாடு. அமைச்சர் காந்தி பங்கேற்பு


ஆற்காட்டில் சாலை பணியாளர்கள் சங்க மாநாடு. அமைச்சர் காந்தி பங்கேற்பு
x
தினத்தந்தி 20 March 2022 6:54 PM IST (Updated: 20 March 2022 6:54 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் சாலை பணியாளர்கள் சங்க மாநாடு நடந்தது. இதில் அமைச்சர் காந்தி கலந்துகொண்டார்.

ஆற்காடு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட மாநாடு ஆற்காட்டில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் எம்.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லோ.சிவசங்கரன் வரவேற்றார். மாநில துணைப்பொதுச் செயலாளர் கா.பெருமாள் தொடக்க உரை நிகழ்த்தினார். மாநில தலைவர் மா.சண்முகராஜா மாநாடு கொடி ஏற்றி வைத்து பேசினார். 

சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பேசினார். ஆற்காடு ஜே.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., தொழிலதிபர் ஏ.வி.சாரதி, நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன் மற்றும் சாலைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். சாலை பணியாளர்களை திறன்மிகு இல்லா ஊழியர்களாக அறிவித்து தர ஊதியம் ரூ.1,900 என மாற்றி அமைத்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும். கடந்த கால ஆட்சியில் அரசு அமைத்த பணியாளர் சீரமைப்பு குழுவை கலைத்து அரசாணை 56-ஐ ரத்து செய்திட வேண்டும். சீருடை, சலவைப் படி, விபத்துப் படி, சைக்கிள் படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story