கிராமங்களுக்கு குடிநீர் வழங்க அமைச்சர் உத்தரவு


கிராமங்களுக்கு குடிநீர் வழங்க அமைச்சர்  உத்தரவு
x
தினத்தந்தி 20 March 2022 7:09 PM IST (Updated: 20 March 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

காவிரி கூட்டுக்குடிநீர் தடைபட்டுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்க அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சாயல்குடி, 
காவிரி கூட்டுக்குடிநீர் தடைபட்டுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்க அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
உத்தரவு
காவிரி கூட்டுக் குடிநீர் இணைப்பு இருந்துதடைபட்டு குடிநீர் கிடைக்கப்பெறாத முதுகுளத்தூர் தொகுதி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி உள்ளிட்ட யூனியன்களில் உள்ள கிராமங் களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு போக்கு வரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடலாடி ஒன்றியம் சவேரியார் பட்டிணம், சவேரியார் சமுத்திரம், மாரந்தை, ஆகிய கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. 
ஆனால் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி கூட்டுக் குடிநீர் கிராமங்களுக்கு கிடைக்க வில்லை என பொதுமக்கள் சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தி யேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் ஆகியோர் களிடம் மனு அளிக்கப்பட்டது. சட்டமன்ற அலுவலர்கள் பொதுமக்கள் கொடுத்த மனுவை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். உடனடியாக அமைச்சர் ராஜகண்ணப்பன் அப்பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க பெறாத காரணங்களை அறிந்து அதனை சரிசெய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சண்முகநாதன், இணை பொறியாளர் குமரேசன், உதவி நிர்வாக பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கிராமங்களை ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது சவேரியார் சமுத்திரம், சவேரியார் பட்டிணம், மாரந்தை, சிறுகுடி போன்ற கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் குடிநீர் செல்வதற்கு அந்த பகுதிகளில் பாலம், ஊருணி தடுப்புச்சுவர் போன்றவை அமைத்தபோது குடிநீர் செல்லும் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டு மல்லாது குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி கரிமூட்டம் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தியதால் கிராமங்களுக்கு குடிநீர் செல்லாதது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை 
சேதம் அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து அதற்கான நிதியை பெற்று கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் அப்போது முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள், காவிரி கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு ஒப்பந்ததாரர் பழனி குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story