நம் பள்ளி நம் பெருமை திட்டத்தினைஅமைச்சர் முபெசாமிநாதன் தொடங்கி வைத்தார்


நம் பள்ளி நம் பெருமை திட்டத்தினைஅமைச்சர் முபெசாமிநாதன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 March 2022 7:26 PM IST (Updated: 20 March 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

நம் பள்ளி நம் பெருமை திட்டத்தினைஅமைச்சர் முபெசாமிநாதன் தொடங்கி வைத்தார்

காங்கேயம்:
காங்கேயம் அருகே படியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் நம் பள்ளி நம் பெருமை திட்டத்தினைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு கூட்டம் 
 காங்கேயம் ஒன்றியம்  படியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் பள்ளி மேலாண்மை குழு சார்பாக பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு நம் பள்ளி நம் பெருமை திட்டத்தினை தொடங்கி வைத்து பேசியதாவது:-
இது உங்கள் பள்ளி. நாம் இணைந்து தான் பள்ளியை மேம்படுத்த வேண்டும். பள்ளியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் பெற்றோராகிய உங்கள் பங்கு இருப்பது அவசியம்.  மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது, மாணவர்களின் இதர திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிப்பதில் நம்முடைய பங்கு இருக்கலாமா என்ற முயற்சியாகத்தான் பள்ளி மேலாண்மை குழுக்களை உங்கள் பங்கேற்புடன் அரசு மறுகட்டமைப்பு செய்ய உள்ளது.
பள்ளி மேலாண்மை குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு. குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர் தான் இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 
தரமான கல்வி
 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை குழு மாற்றி அமைக்கப்படும். பள்ளி அமைந்திருக்கும் ஊர் மக்களின் பங்களிப்போடு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை குழுவின் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள்.
எனவே பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் உட்பட அனைவரும் இணைந்து தம் பிள்ளைகள் பயிலும் பள்ளியை கற்றலுக்கு மேலும் உகந்த இடமாக ஆக்கி நமது பள்ளியாக மாற்றுவோம். பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துவோம், அரசு பள்ளிகளை வளப்படுத்துவோம். 
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சரிடம் படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் படியூர் ஊராட்சி பணிகளுக்கு, தன்னுடைய சொந்த செலவில் டிராக்டர் வாங்கி படியூர் ஊராட்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.

Next Story