வீட்டின் மேல் மாடியில் மண் பாத்திரத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பறவை ஆர்வலர்கள் கோரிக்கை


வீட்டின் மேல் மாடியில் மண் பாத்திரத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பறவை ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2022 7:38 PM IST (Updated: 20 March 2022 7:38 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் மேல் மாடியில் மண் பாத்திரத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பறவை ஆர்வலர்கள் கோரிக்கை

சேவூர்:
பறவைகளைபாதுகாக்க  வீட்டின் மேல் மாடியில் மண் பாத்திரத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சலிக்காத ஓசை
கேட்க, கேட்க சலிக்காத ஓசை ஒன்று மழலைக்குரல் மற்றொன்று   சிட்டுக்குருவியின் கிறீச் ஓசை. பழங்காலமாக மானுட சமுகத்தோடு ஒன்றி பழகி விட்ட ஒரு அற்புதமான பறவைதான் சிட்டுக்குருவி. சுறுசுறுப்புக்கு இதற்கு ஈடு இணை எதுவும இல்லை.  வீட்டின் மூலைகள், வாயிற்கதவு, உத்திரம், மரங்கள் என ஆங்காங்கு கூடுகட்டிவாழ்ந்த இனம் சிட்டுக்குருவி மற்றும் பறவைகள். சிட்டுக்குருவி விவசாய நிலங்களில் உள்ள புழு பூச்சிகளை உண்டு வந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பேரழிவை சந்திந்து வருகிறது. இந்த குருவிகள், பறவை இனங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு நம் வீட்டின் அருகில் உள்ள மரங்களில் கூடு கட்டி அதில் வாழ்ந்து வந்த நிலையில் அதிகாலை நேரங்களில் தனது அழகான ரீங்காரகுரலால் சத்தமிட்டு, அந்த இனிமையான குரல் கேட்டு நாம் உறக்கத்திலிருந்து எழுவோம்.
ஆனால் இப்போது குறைந்து போன கிராமங்கள், நாகரிகம் அதிகரித்து ஓலை வீடுகள் தற்போது கான்கிரீட் வீடுகளாக மாறி விட்டது. ஓலை வீடுகள், ஓட்டுவில்லை வீடுகளில் குருவிகள் கூடு கட்டும். அதை நமது முன்னோர்கள், பெரியவர்கள் அந்த கூட்டை அழித்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என அழிக்கமாட்டார்கள். வீடுகளின் கூரை, மரத்தால் செய்யப்பட்ட விட்டங்கள் போன்றவற்றில் உள்ள பூச்சிகளை உணவாக்கிக் உட்கொள்கின்றன. இதனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் குருவி கூட்டை அழிக்க கூடாது என்பார்கள். 
ஆனால் தற்போது நகரமயம் தான் சிட்டுக்குருவி மற்றும் பறவைகள் அழிவுக்கு காரணம். செல்போன் வருகையாலும், செல்போன் டவர்களில் வரும் கதிர்வீச்சுகளாலும் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருவதாக கூறுகிறார்கள்.
பறவைகளை பாதுகாப்போம்
ஒவ்வொருநாளும் வெட்டப்படும் மரங்களுக்கு அளவே இல்லை. தினமும் விளை நிலங்கள் வணிக வளாகமாகி விட்டது. காடுகள் பரப்பளவு குறைந்து வருகிறது. விரிவாக்கம் என்ற பெயரில் இயற்கை சிதைக்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் பறவைகளை படபடக்க வைக்கிறது. வெட்டப்படும் மரங்களால் அதில் கூடு கட்டிய பறவகைள் வழிதெரியாமல் விழி பிதுங்கி விடிவிடிய பறந்து செத்து மடிகிறது. காலையில் இருந்த மரத்தை மாலையில் காணாது அதில் இருந்து கூட்டை எங்கே தேடுவது. இனால் கண்ணீர் வடிக்கும் பறைவகள் ஏராளம். தற்போது சிட்டுக்குருவிகள் காடுகளில் இருந்து ஊருக்குள் வந்தாலும் கூடுகட்ட இடமில்லாமலும், வாகன போக்குவரத்து இரைச்சல் காரணங்களால் வாழவழியின்றி அழிந்து வருகிறது.
 சிட்டுக்குருவிகளைப் பற்றியும், பறவைகளை பற்றி விழிப்புணர்வு இருந்தாலும், அதற்காக பரிதாப்படும் நாம், அழிந்துவரும் பறவைகளை பற்றி கவலைப்பட மறந்து விட்டோம். எனவே இயற்கையோடு பறவைகளையும் பாதுகாப்போம். அனைத்து பறவைகளும் குளத்திற்கு சென்று தண்ணீர் அருந்த கூடியவை அல்ல. வெயிலின் தாக்கத்தால் குளங்களில் தண்ணீர் எளிதில் வற்றிவிடும். எனவே பறவைகள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்படும்.வீடுகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதன் வாயிலாக அவை அழியாமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் பறவை ஆர்வலர்ககள்.

Next Story