ஊட்டியில் கொட்டித்தீர்த்த மழை
ஊட்டியில் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி
ஊட்டியில் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீர்நிலைகள் வறண்டன
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனி தாக்கம் காணப்பட்டது. தொடர் உறை பனியால் வனப்பகுதிகளில் உள்ள புற்கள் காய்ந்து காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருந்தது.
மேலும் மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் பல இடங்களில் பயிரிட்டு இருந்த செடிகள் கருகின. இந்தநிலையில் ஊட்டியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மதியம் 12.15 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.
கொட்டித்தீர்த்த மழை
இந்த மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் ஊட்டியில் உள்ள சில சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் ஒதுங்கி நின்றனர்.
ஊட்டியில் பெய்த திடீர் மழையால் இங்கு இருந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியது. அதேபோல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வரும் நாட்களில் மழை பெய்தால் காட்டுத்தீ அபாயம் நீங்கும். மேலும் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story