ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை கண்காணிக்க குழு அமைப்பு


ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை கண்காணிக்க குழு அமைப்பு
x
தினத்தந்தி 20 March 2022 8:06 PM IST (Updated: 20 March 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

குன்னூர்

ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

காட்டு யானைகள் நடமாட்டம்

மலைமாவட்டமான நீலகிரியில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் மற்றும் பசுந்தீவனத்தை தேடி காட்டு யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது. 

அதுபோன்று வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானை கூட்டம், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து அங்குள்ள ரன்னிமேடு தண்டவாளத்தில் முகாமிட்டு இருந்தன. 

அத்துடன் ரெயில் பாதையில் உள்ள குடிநீர் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தியது. 

குழு அமைப்பு 

இதனால் ரன்னிமேடு பகுதியை சுற்றி உள்ள விதை பண்ணை, தேயிலை தோட்ட தொழிலாளர் மற்றும் கிளண்டேல் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். எனவே காட்டு யானைகளை துரத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து இந்த பகுதியில் காட்டு யானைகளை கண்காணிக்க சிறப்பு குழுவை அமைத்து உள்ளனர். இந்த குழுவை சேர்ந்த வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

தவிர்க்க வேண்டும்

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ரன்னிமேடு பகுதியில் நடமாடும் காட்டு யானைகளை துரத்த 15 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

எனவே இரவு நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர். 


Next Story