மருத்துவ காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்


மருத்துவ காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 20 March 2022 9:24 PM IST (Updated: 20 March 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மருத்துவ காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மாநில அளவிலான நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய செயலாளர் ஜெயபால், மாநில செயலாளர் தியாகராஜன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் டாக்டர் மகுடமுடி வரவேற்றார். 
கூட்டத்தில் மாநில அளவிலான நிர்வாக குழுக்களின் செயல்பாடுகள், மருத்துவ துறையின் செயல்பாடுகள் மற்றும் பரிந்துரைகள், சங்கத்திற்கான வருங்கால வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக கள்ளக்குறிச்சியில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகம் முன்பாக மாநில தலைவர் பழனிச்சாமி மரக்கன்று நட்டார். 

கூட்டத்தில் மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். முதுகலை பட்ட மேற்படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டு தந்தமைக்கு அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜா, பொருளாளர் தரணி கவாஸ்கர், மாநில பொறுப்பாளர் நேரு, சஞ்சீவி ஆஸ்பத்திரி டாக்டர்கள் ரவிச்சந்திரன், குமரேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் மருத்துவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story