ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் திருமண உதவித்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் திருமண உதவித்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2022 9:34 PM IST (Updated: 20 March 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் திருமண உதவித்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

கடலூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் இந்த ஆண்டு தாக்கல் செய்த தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மாணவிகளுக்கு உயர்கல்விக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர் களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம், பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்துள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சம் வரை ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு நிதி கிடைத்து வந்தது. தற்போது இந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே தமிழக அரசு மீண்டும் இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story