ராமநத்தம் அருகே 10 ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்


ராமநத்தம் அருகே 10 ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்
x
தினத்தந்தி 20 March 2022 10:01 PM IST (Updated: 20 March 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே 10 ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்


ராமநத்தம்

ராமநத்தம் அடுத்துள்ள கொ.குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி மகள் தமிழ்சுடர்(வயது 15). கொரக்கவாடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த இந்நிலையில் 14-ந் தேதி பள்ளிக்கு செல்லாததால் அவரது தந்தை கண்டித்துள்ளார்.

பின்னர் மறுநாள் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற தமிழ்சுடர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் .ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Next Story