பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்

பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்
x
தினத்தந்தி 20 March 2022 10:05 PM IST (Updated: 20 March 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் தலைமையாசிரியரை மாற்ற வலியுறுத்தி மேலாண்மைக்குழு கூட்டத்தை புறக்கணித்து விட்டு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தலைமையாசிரியரை மாற்ற வலியுறுத்தி மேலாண்மைக்குழு கூட்டத்தை புறக்கணித்து விட்டு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலாண்மைக்குழு கூட்டம்
வேதாரண்யம் நகராட்சி மூன்றாம் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. 
முற்றுகை போராட்டம்
அதன்படி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மேலாண்மைக்குழு கூட்டத்தை மாணவர்களின் பெற்றோர் புறக்கணித்து விட்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  பள்ளி தலைமையாசிரியரை மாற்றினால் தான் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என கோஷங்கள் எழுப்பினர்.  இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story