பள்ளிபாளையத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
பள்ளிபாளையத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சியில் நேற்று வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. காலை முதல் மாலை வரை நடந்த முகாமை அக்ராஹரம் ஊராட்சி தலைவர் வசந்தி வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். துணை தலைவர் சின்னதம்பி முன்னிலை வகித்தார்.
எலந்தகுட்டை வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவர் டாக்டர் ரேவதி தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் 50 கர்ப்பிணிகளுக்கு தாய்சேய் நல பெட்டகம் வழங்கப்பட்டதோடு, 200 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் சின்னத்தம்பி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குமரேஷ், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story