துமகூரு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்-குமாரசாமி வலியுறுத்தல்


துமகூரு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்-குமாரசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2022 10:10 PM IST (Updated: 20 March 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

துமகூரு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டுமென்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்

பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
துமகூருவில் தனியார் பஸ் விபத்தில் 6 பேர் இறந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ரூ.5 லட்சம் வழங்கி கை கழுவி கொள்வது சரியல்ல. காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சையை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்திற்கு உள்ளான பஸ்சில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அந்த வழியில் பஸ்களின் போக்குவரத்து மிக குறைவு. அதனால் ஒரே பஸ்சில் அதிகளவில் மக்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. நிலைமை இவ்வாறு இருந்தும் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாவகடா பின்தங்கிய பகுதி. போதிய பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அங்கு 25 சதவீத கிராமங்களுக்கு பஸ் வசதியே இல்லை. அரசு உடனடியாக அந்த கிராமங்களுக்கு பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அரசு உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

Next Story