ஓட்டப்பிடாரம் அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை


ஓட்டப்பிடாரம் அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 March 2022 10:18 PM IST (Updated: 20 March 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்

ஓட்டப்பிடாரம், 
மார்ச்.21-
ஓட்டப்பிடாரம் அருகே, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வியாபாரி
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சேகர் (வயது 28). இவர் ஊரில் சேவு கடை வைத்திருந்தார். கடன் வாங்கி கடையை நடத்தி வந்துள்ளார்.
சேவு கடையில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடன் பிரச்சினையும் இருந்து வந்துள்ளது. இதனால் சேகர் கடந்த சில நாட்களாக சோகமாக இருந்துள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் ஊருக்கு வடக்குப்புறம் உள்ள காட்டுப்பகுதியில், விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷத்தை) குடித்து விட்டு அவரது மனைவிக்கு செல்போனில் மருந்து குடித்ததை கூறியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சேகருக்கு பவித்ரா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

Next Story