நாடக போட்டியில் மாணவர்கள் வெற்றி


நாடக போட்டியில் மாணவர்கள் வெற்றி
x
தினத்தந்தி 20 March 2022 10:40 PM IST (Updated: 20 March 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

நாடக போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

காரைக்குடி, 
சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான நாடகப் போட்டி காளையார்கோவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் நடைபெற்றது. இதில் தேவகோட்டை அருகே உள்ள புளியால் ‌அரசு‌ உயர்நிலைப் பள்ளி முதல் இடம் பெற்றது.முதல் இடம் பெற்ற புளியால் ‌அரசு‌ உயர்நிலை பள்ளியின் 9-ம் வகுப்பை சேர்ந்த சஜன், நிஷா, வசந்தி, உதயரசி, அருள் கேத்தரின், மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதய ராஜ், இவருக்கு உதவியாக இருந்த பயிற்சி ஆசிரியைகள் யோகேஸ்வரி, ஜான்சி ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகேந்திரன், ஊராட்சி தலைவர் மிக்கேல்ராஜ், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப், ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்கள் ஆகியோர் பாராட்டி ‌வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Next Story