கோவில் பூட்டை உடைத்து திருட்டு


கோவில் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 20 March 2022 10:43 PM IST (Updated: 20 March 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

கோவில் பூட்டை உடைத்து திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி, 
தேவகோட்டை அருகே உள்ளது வழங்காவயல் கிராமம். இந்த கிராமத்தில் சிங்கமுக காளியம்மன் கோவில் உள்ளது.  இந்த கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த ரூ.2 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story