நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு பணிகள் மும்முரம்


நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 20 March 2022 10:46 PM IST (Updated: 20 March 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

நேரடி நெல் விதைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

வடகாடு:
வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கோடைகால குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் நெல் விதைகளை நாற்றங்கால் மூலமாக விதைத்து நெல் பயிர்களை பிடுங்கி விவசாய தொழிலாளர்கள் மூலமாக நடவு செய்து பயிரிட்டு வருகின்றனர்.  ஒருசில விவசாயிகள் கடன் வாங்கி நவீன தொழில் நுட்ப எந்திரம் மூலம் நேரடியாக தங்களது வயல்களில் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக தேவைக்கு ஏற்ப மட்டுமே விதை நெல் விதைக்கப்படுவதாகவும், ஆட்கள் சம்பளம், விதை நெல் உள்பட குறைந்த செலவு மட்டுமே ஆவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எண்ணற்ற நவீன தொழில் நுட்ப வேளாண் கருவிகள் இருந்தும் விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை என்றும் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறை கூறி வருகின்றனர்.

Next Story