அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருமயம்:
திருமயம் அருகே திருவம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமான வயலில் ஒருவர் அரிவாளுடன் சுற்றித்திரிந்தார். இதையடுத்து ராஜ்குமார் திருமயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான், திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (22) என்பதும், வன விலங்குகள், பறவைகளை வேட்டையாடுவதற்காக சுற்றித்திரிந்தது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story