வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது


வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 20 March 2022 10:59 PM IST (Updated: 20 March 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் கிராமத்தை  சேர்ந்தவர் சிவா. இவர் அதே ஊரில் இருந்து வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு தாழ்வாக சென்ற மின் கம்பி மீது  வைக்கோல் உரசியது. இதில்  வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ டிராக்டர்  முழுவதும் பரவி எரிந்தது.  இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் வைக்கோல் மற்றும் டிராக்டர் எரிந்து சேதமானது.


Next Story