கதண்டு கடித்து சிறுமி உள்பட 4 பெண்கள் காயம்


கதண்டு கடித்து சிறுமி உள்பட 4 பெண்கள் காயம்
x
தினத்தந்தி 20 March 2022 11:14 PM IST (Updated: 20 March 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

கீழையூர் அருகே கதண்டு கடித்து சிறுமி உள்பட 4 பெண்கள் காயம் அடைந்தனர்.

வேளாங்கண்ணி:
கீழையூர் அருகே திருமணங்குடி குளக்கரையில் பெரிய ஆலமரம் உள்ளது.இதில் கதண்டு கூடுகட்டி இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குளத்தில் குளிக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி சுதா, மகள் இன்பரசி(வயது11), இளங்கோவன் மனைவி மீனாட்சி, வீரபாண்டியன் மனைவி இளவரசி ஆகிய 4 பேரை கதண்டுகள் கடித்தது. இதில் காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சுதா நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டனர்.
 இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பாவெற்றி வேளாங்கண்ணி தீயணைப்பு  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில்  தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆலமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டை அழித்தனர்.

Next Story