தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ37¾ லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.37¾ லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் அரசு மருத்துவமனைக்கு ஓசூர் ரோட்டரி கிளப் மூலமாக ரூ.37 லட்சத்து 74 ஆயிரத்து 675 மதிப்பில் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. முதன்மை மருத்துவர் ஞானமீனாட்சி, இணை இயக்குனர் டாக்டர் பரமசிவம் ஆகியோரிடம் மருத்துவ உபகரணங்களை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் வழங்கினர். இதில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது விழாவில் தேன்கனிக்கோட்டை வட்டம், மலைக்கிராமங்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்க ரோட்டரி கிளப் போன்றோர் முன்வரவேண்டும். இந்த மருத்துவமனை கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதன்மை மருத்துவமனையாக மாற்ற டாக்டர்கள், செவிலியர்கள், அயராது உழைக்க வேண்டும் என்று கூறினர். விழாவில் செவிலியர்களுக்கு, பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story