அஞ்செட்டி அருகே வீரபத்திர சாமி கோவில் தேரோட்டம்
அஞ்செட்டி அருகே வீரபத்திர சாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தேவன் கவுண்டன் தொட்டி கிராமத்தில் வீரபத்திரசாமி, சனீஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்திகளை அமர்த்தி பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து கோவிலை சுற்றி இழுத்து வந்து நிலை நிறுத்தினர். விழாவில் அஞ்செட்டி, கர்நாடக மாநில பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story