தொப்பூர் அருகே நகை கடை ஊழியர் வீட்டில் திருட்டு


தொப்பூர் அருகே  நகை கடை ஊழியர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 20 March 2022 11:18 PM IST (Updated: 20 March 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே நகை கடை ஊழியர் வீட்டில் திருட்டு போனது.

நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்துராஜ் (வயது35). இவர் சேலத்தில் உள்ள ஒரு நகை கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முருகம்மாள். இவர் கடந்த 14-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மாற்றுத்திறனாளி மகனை தர்மபுரியில் உள்ள அரசு பள்ளியில் பயிற்சிக்காக அழைத்து சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.4,500 மற்றும் வெள்ளி கொலுசு, வெள்ளி காசுகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story