தொப்பூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு


தொப்பூர் அருகே  வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு
x
தினத்தந்தி 20 March 2022 11:18 PM IST (Updated: 20 March 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே உள்ள மேடுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36) கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் மரம் நபர்கள் 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ வைத்து சென்றனர். இதையறிந்த சுரேஷ்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார், மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story