வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை பகுதி அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்
வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை பகுதி அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி
வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை பகுதி அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி
ஆலங்காயம் ஒன்றியம், கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் வட்டார கல்வி அலுவலர் கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் வேண்டாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் துரை வரவேற்றார். ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதாபாரி கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பள்ளி மேம்பாடு குறித்து அனைத்து தரப்பினரும் கருத்து கூறினர். முடிவில் உதவி ஆசிரியர் வசந்தி நன்றி கூறினார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு ஊர் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கல்விக்குழு தலைவர் ரேவதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்றார். நகரமன்ற வார்டு உறுப்பினர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். இதில், ஆசிரியர்கள் மகஜபீன், பிரபு, அரவிந்தன், சசிகலா கலந்துகொண்டார்கள். முடிவில் ஆசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.
ஆலங்காயம்
ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, மாணவர்களின் கல்வி கற்றல் திறன், மாணவர்கள் இடைநின்றல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story