கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள்


கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள்
x
தினத்தந்தி 20 March 2022 11:59 PM IST (Updated: 20 March 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள் வழங்கப்பட்டது.

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை வளர்க்கும் 97 விவசாயிகளுக்கு 75 சதவீத மானிய விலையில் ரூ.16 லட்சத்து 55 ஆயிரத்து 436 மதிப்பிலான புல்வெட்டும் மற்றும் புல்நறுக்கும் எந்திரங்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கி எந்திரங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார். 

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட ரமணன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குனர் பாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகராணி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story