தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 March 2022 11:59 PM IST (Updated: 20 March 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பகுதி

பூங்கா கழிவறை சேதம்

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் 19-வது வார்டில் சத்துவாச்சாரி மந்தைவெளி அருகே குறிஞ்சி நகர் உள்ளது. இங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உயர் தரத்தில் கழிவறைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தொட்டியும் அமைக்கப்பட்டது. சமூக விரோதிகள் சிலர் கழிவறையின் கதவுகள், கோப்பைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். எனவே சேதப்படுத்தப்பட்ட கழிவறையை சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.

  -மோகன்ராஜ், வேலூர்.

ஆட்டோக்களால் இடையூறு

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் இரட்டை பிள்ளையார் கோவிலில் இருந்து கோவில் ராஜகோபுரத்துக்கு செல்லும் வழியில் பொதுமக்களும், பக்தர்களுக்கும் இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. சில சமயங்கள் அந்த வழியாக வரும் பக்தர்கள் மீது ஆட்டோக்கள் மோதுவது போல் செல்கின்றன. மேலும் ஆட்டோவில் அதிக ஒலியை எழுப்பும் புைகப்போக்கிகள் பயன்படுத்துகின்றன. எனவே அந்தப் பகுதியில் ஆட்டோக்கள் செல்வதை போலீசார் முறைப்படுத்த வேண்டும்.
  -பீமா, திருவண்ணாமலை.

பூங்கா பராமரிக்கப்படுமா?

  வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே அன்னை தெரசா 5-வது தெரு உள்ளது. இங்குள்ள பூங்கா பகுதி பராமரிப்பின்றி குப்பைகள் தேங்கி பயனற்ற நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் குப்பைகளை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ஹரிகிருஷ்ணன், வேலூர்.

ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும்

  வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி வீதியில் 20 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது. அந்த ஆழ்துளை கிணற்றை மூடாமல் வைத்துள்ளனர். அங்கு குழந்தைகள் விளையாட அச்சப்படுகின்றனர். எனவே மூடாமல் வைத்துள்ள ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும்.
  -முத்துராஜ், வளத்தூர்.

கால்வாய் தூர்வாரப்பட வேண்டும்

  வேலூர் 2-வது மண்டலத்தில் 19-ம் வார்டில் முல்லை நகர் உள்ளது. இங்கு குடியிருப்புப் பகுதிக்கு நடுவில் செல்லும் பெரிய கழிவு நீர் கால்வாய் முழுவதும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார கேட்டை சரிசெய்ய, மாநகராட்சி நிர்வாகத்தினர் கால்வாயை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
  -ஜெகன், வேலூர்.

நடைபாதை சேதம்

  ஆம்பூரில் இருந்து துத்திப்பட்டு செல்லும் வழியில் பாலாறு பாலம் உள்ளது. பொதுமக்கள் நடப்பதற்காக பாலத்தின் ஓரம் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையில் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. நடப்பவர்கள் கீழே விழும் நிலை உள்ளது. சேதமடைந்த நடைபாதையை அதிகாரிகள் சரி செய்து தர வேண்டும்.
  -எம்.ராதாகிருஷ்ணன், வளையாம்பட்டு.

மின்மோட்டார் சரிசெய்யப்படுமா?

  வேலூர் 2-வது மண்டலம் சத்துவாச்சாரி மந்தைவெளியில் பிராமணர் தெரு உள்ளது. இங்கு பொதுமக்கள் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை மின்மோட்டார் தண்ணீர் குழாய் பழுதடைந்து விட்டது. பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்து வந்த மோட்டார் பழுதாகி 10 நாட்களுக்கு மேல் ஆகியும், இன்னும் சரிசெய்ய படாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மோட்டாரை பழுது நீக்கி சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பார்களா என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
  -நாராயணசாமி, வேலூர்.

ஆபத்தான நிலையில் மின்கம்பிகள்

  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கெங்கவரம் கிராமத்தில் அதக பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளன. இங்கு நிலத்துக்கு மேலே கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளன. இதனால் நிலத்தில் உழவடிக்க, புழுதியடிக்க டிராக்டர்களை கொண்டு வர சிரமமாக உள்ளது. மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் எனப் பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -முனுசாமி, கெங்கவரம்.


Next Story