கராத்தே போட்டி


கராத்தே போட்டி
x
தினத்தந்தி 21 March 2022 12:32 AM IST (Updated: 21 March 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கராத்தே போட்டி நடந்தது.

நெல்லை:
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி தகுதி சுற்று நேற்று நடந்தது. இந்த போட்டியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேயர் பி.எம்.சரவணன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பட்டா, துணிசே என்ற இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியும் 6 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த போட்டியில் போட்டி ஒருங்கிணைப்பாளர் அப்துல் வஹாப், நைனா முகமது மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நெல்லை மத்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசி மணி, கவுன்சிலர் சேக்மன்சூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story