வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
சீர்காழி அருகே வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
சீர்காழி அருகே நிம்மேலி, வள்ளுவக்குடி, அகனி, கொண்டல், புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் விவசாயிகள் உள்ளனர். மேற்கண்ட பகுதியில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் மின் மோட்டார் மூலம் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மேற்கண்ட கிராமங்களில் வயல்வெளி பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் தாழ்வாகவும் செல்கின்றன. இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் அடிக்கடி மின்சாரம் தாக்கி உயிரிழந்து வருகின்றன.
சீரமைக்க வேண்டும்
மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் மழைகாலங்களில் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தாழ்வான செல்லும் மின்கம்பிகளால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வயலில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளையும், சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story