வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேர் கைது
கள்க்காடு வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடமான் வேட்டை
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) வினோத், வனவர் செல்வசிவா, வனக்காப்பாளர்கள் ஆரோக்கியசெல்வன், மாரீஸ்குமார், வனக்காவலர் சிவசுப்பிரமணியன், வேட்டை தடுப்பு காவலர்கள் மகேந்திரன், சிவா ஆகியோர் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட புதுக்குடி மேல முருகன் கோவில் வனப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 40), குமார் (42), மேலப்புதுக்குடியை சேர்ந்த ஸ்டாலின் (42), வெள்ளாங்குழியை சேர்ந்த முருகன் (50) ஆகியோர் வேட்டை நாய்கள் மூலம் கடமானை வேட்டையாடி பிடித்து கொன்று, இறைச்சிக்காக வெட்டிக் கொண்டு இருந்தனர்.
3 பேர் கைது
இதையடுத்து ஆறுமுகம், குமார், ஸ்டாலின் ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். முருகன் தப்பி ஓடி விட்டார்.
கைதானவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, 2 மோட்டார் சைக்கிள்கள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆறுமுகம் உள்பட 3 பேரையும் வனத்துறையினர் சேரன்மாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முருகனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story