சேலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு பருத்தி விதை ரெயிலில் அனுப்பப்பட்டது


சேலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு பருத்தி விதை ரெயிலில் அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 21 March 2022 12:41 AM IST (Updated: 21 March 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு 5 ஆயிரத்து 559 குவிண்டால் பருத்தி விதை ரெயிலில் அனுப்பப்பட்டது.

சூரமங்கலம்:-
சேலம் ரெயில்வே கோட்ட வணிகத்துறையின் சார்பில் சரக்கு போக்குவரத்து மூலம் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதிந்தாவுக்கு பருத்தி விதைகள் அனுப்பப்பட்டன. லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட 33 ஆயிரத்து 341 மூட்டைகளில் இருந்த 5 ஆயிரத்து 559 குவிண்டால் பருத்தி விதையை, தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் ஏற்றி பஞ்சாப் மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன்மூலம் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.30 லட்சத்து 41 ஆயிரம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story