டாக்டர் வீட்டு முன்பு கையை அறுத்து இளம்பெண் போராட்டம்


டாக்டர் வீட்டு முன்பு கையை அறுத்து இளம்பெண் போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2022 12:41 AM IST (Updated: 21 March 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே காதலித்து ஏமாற்றியதாக கூறி டாக்டர் வீட்டு முன்பு இளம்பெண் கையை அறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஓமலூர்:-
ஓமலூர் அருகே காதலித்து ஏமாற்றியதாக கூறி டாக்டர் வீட்டு முன்பு இளம்பெண் கையை அறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
டாக்டர்
ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி அமரகுந்தியை சேர்ந்தவர் அய்யாதுரை. தொழிலாளர் நலத்துறை அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பரிமளா காந்தம். ஓய்வு பெற்ற செவிலியர். இந்த தம்பதிக்கு பிரபுராஜ், சிவா சத்தியராஜ், மகான் மகாராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். 3 பேருமே டாக்டர்கள்.
கடைசி மகன் மகான் மகாராஜ் மேச்சேரியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருடைய கிளினிக் அருகே தனியார் ஆய்வகம் உள்ளது. இதில் மேட்டூர் புதுசாம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகள் கவுசல்யா (வயது 24) டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். 
காதலித்து ஏமாற்றியதாக புகார்
இந்தநிலையில் மகான் மகாராஜ்க்கும், கவுசல்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அவர்கள் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மகான் மகாராஜ், கவுசல்யாவை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கவுசல்யா, காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி கடந்த ஆண்டு மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் மகான் மகாராஜ், இவருடைய தந்தை அய்யாதுரை, தாய் பரிமளா காந்தம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே மகான் மகாராஜ் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். 
டாக்டர் வீடு முன்பு போராட்டம்
இந்தநிலையில் கவுசல்யா நேற்று முன்தினம் அமரகுந்தியில் உள்ள மகான் மகாராஜ் வீட்டுக்கு சென்றார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மகான் மகாராஜ்க்கும், கவுசல்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி கவுசல்யா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கையை அறுத்து கொண்டார்.
கையில் இருந்து ரத்தம் கொட்டியதால் சிறிது நேரத்தில் அவர் மயங்கினார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தொளசம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, கவுசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கவுசல்யா தாக்கியதாக கூறி மகான் மகாராஜ், பரிமளா காந்தம் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலித்து ஏமாற்றியதாக கூறி டாக்டர் வீட்டு முன்பு இளம்பெண் கையை அறுத்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story