சர்வதேச அபாகஸ் போட்டியில் மாணவர்கள் சாதனை
சர்வதேச அபாகஸ் போட்டியில் செங்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
தென்காசி:
பிரைநோபிரைன் கிட்ஸ் அகாடமி சார்பில் சர்வதேச அளவிலான அபாகஸ் போட்டி இணையவழியில் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் அப்பள்ளி மாணவர்கள் ஷேக் உசைன் (6-ம் வகுப்பு), ஹாரூன் ரஷீத் (2-ம் வகுப்பு) ஆகியோர் தங்கப்பதக்கமும், சமீரா பாத்திமா (2-ம் வகுப்பு), மினா சுல்பியா (6-ம் வகுப்பு), அமீரா பாத்திமா (5-ம் வகுப்பு), முகமது உசேன் (6-ம் வகுப்பு) ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். அவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story