முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 21 March 2022 1:05 AM IST (Updated: 21 March 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. 2 ஆயிரம் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. 2 ஆயிரம் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முள்ளாட்சி மாரியம்மன் கோவில்
திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான முள்ளாட்சி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் விழா நடத்த முடியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில்  இந்த ஆண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி அம்மன் வீதிஉலா காட்சியும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
2 ஆயிரம் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. கோவில் எதிர்புறத்தில் அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி மாலை  6 மணிக்கு தொடங்கி 8 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 2 ஆயிரம் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்களி்ன் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவிழாவை முன்னிட்டு காலையில் இருந்து போக்குவரத்தை சரி செய்து மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. குறிப்பாக நாகப்பட்டினம், வேதாரண்யம், முத்துப்பேட்டை, செல்லும் வாகனங்கள் பைபாஸ் சாலை வழியாக அனுப்பி வைக்கப்பட்டது. 
பாதுகாப்பு பணி
பாதுகாப்பு பணியில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story