கமலாலய குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
திருவாரூர் கமலாலய குளத்தில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டான்.
திருவாரூர்:
திருவாரூர் கமலாலய குளத்தில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டான்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
கமலாலய குளத்தில்
திருவாரூர் அருகே உளபுலிவலத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 14). 7-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டான். இந்தநிலையில் நேற்று சக்திவேல் தனது நண்பர்களுடன் கமலாலய குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டான்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு துறையினர் மாவட்ட அலுவலர் வடிவேல் உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர்கள் ரவிச்சந்திரன், முருகையன், தீயணைப்பு வீரர்கள் ராமசுப்பிரமணியன், ராபர்ட் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு என்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சிறுவன் சாவு
இதையடுத்து தண்ணீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனால் எந்தவித பலனும் இல்லாததால் தீயணைப்பு துறை வாகனம் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story