தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அறந்தாங்கி முக்கம் ரவுண்டானா அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு வடசேரி முக்கம் சாலையும் பராமரிப்பின்றி கரடு, முரடாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
Related Tags :
Next Story